நிச்சயிக்கப்பட்ட அந்த நாள்..,
கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளைமறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் அதன் அழங்காரமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?
புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!
மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!
உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?
மரணம் உனை அறவணைக்கு முன் முளங்காளிட்டு உனக்கு வணக்கம் செலுத்தியவன் கூட, நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின்தள்ளி நின்றுவிடுவான்.
நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!
கட்டு நோட்டுக்களும்
கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே
உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!
சிந்திக்க சில வரிகள்...
நாம் நன்றாக இல்லை !
காரணம் நாம் ஒன்றாக இல்லை !
ஒரே இறை – எத்தனை இயக்கங்கள் !
ஒரே மறை – எத்தனை குழப்பங்கள் !
ஒரே பிறை – எத்தனை பெருநாட்கள் !
மார்க்கம் வலியுறுத்தும் பிரியம் !
தெரியவில்லை – நமக்கு !
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது !
முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள் !
துவேச கற்களை வீசினோம் !
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம் !
காலமெல்லாம் நாம் கதறினோம்!
கபுர்ஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான் !
உணவின்றி மடியும் சோமாலியா !
பற்றி எரியும் பாலஸ்தீன் !
உயிர்களின் புதைகுழி காஷ்மீரின் சோகம் !
பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம் !
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம் !
இஸ்லாமிய இயக்கங்களே – நீங்கள் !
வேற்றுமையில் ஒற்றுனை காண வேண்டாம் !
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள் !
இஸ்லாம் தான் பேரியக்கம் என்று !
ஓர் குடையின் கீழ் நின்று !
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள் !
எது சுதந்திரம்?
அரைக்குறை ஆடை
சுதந்திரமா;
நிர்வாணப்படுத்திப் பார்க்கும்
உலகத்தின் தந்திரமா!
கண்காட்சி உனக்கிட்டப் பெயர்
கலாச்சாரமா;
கண்களுக்குக் கிடைக்கும்
விபச்சாரமா!
கவர்ச்சிக் காட்டிக்
கிளர்ச்சியூட்ட நீ
என்ன போதையா;
வன்கொடுமைக்கு
அழைத்துச் செல்லும் பாதையா!
முன்னேறிவிட்டோம் என
முழக்கமிட்டுக் கொண்டு;
இன்னும் 33 சதவீதம்
கேட்கிறாய் இன்று!
கண்ணியம் காக்கும் பெண்மைக்கு
மருந்தொன்று உண்டு;
மணக்கும் இஸ்லாத்தைக் கொண்டு!
நுழைந்து விடு இன்று
திரை விலக்க மாட்டோம்!
உன் எச்சில்
ஊறும் இச்சைக்காக
தடைச்செய்ய நினைத்தாயோ;
எங்களைத் தடுத்திடத் துடித்தாயோ!
அடிமை ஏதுமில்லை
தனிமைப் பட்டமும் இல்லை;
உன் பசிக்கொண்ட
பார்வைக்கு வழியவந்து
ஒளிந்திருக்கிறேன்!
தடுமாறும்
தடம்மாறும் உன்
மனதிற்குத் திரைப்போட
நான் திரையிட்டுவந்தேன்!
கல்விக் கற்க
பள்ளிக்கு திறந்து வரச்செய்கிறாய்;
அறிவு செய்யும் வேலைக்கு
அங்கம் காட்டச்சொல்கிறாய்!
விபச்சாரத்திற்கு வித்திட்டு
உபச்சாரம் செய்கிறாய்;
பெண்ணடிமைக்கு மாற்று பெயரிற்று
கலாச்சாராம் என்கிறாய்!
வெத்துப் பேச்சிக்கு
விலைப்போக மாட்டோம்;
வெட்டிப் போட்டாலும்
திரைவிலக்க மாட்டோம்!
பிரிய மனமில்லாமல்....
சோர்ந்து இருக்கும் ஈமானை
தட்டி எழுப்பும் ரமலானை
விடைக்கொடுக்க கடைக்கோடியில் நிற்கின்றேன் நான்!
எப்போதாவது தொழுபவரையும் பள்ளிக்கு
எப்படியும் இழுத்து வரும்
பொன்னான மாதமாய் நீ!
வீங்கிப்போன கால்களுடன்
தூங்க மறுக்கும் என் கண்கள்;
கண்ணீர்க் கொண்டு என் பாவங்களை
கழுவிக்கொள்ள கருணையாளா
உன்னிடமே சரண்;
இருக்கின்ற இரவை
இறுக்கி அணைப்பேன் தொழுகையாலே!
அடுத்தவருடம் அடைவோமோ
அருள் நிறைந்த ரமலானை;
கண நேரம் நினைத்தாலும்
கனமாகும் மனது;
உன்னை விட்டுப் பிரிய
என் மீது தொட்டு நிற்கும்
புத்தாடையுடன் பெருநாள்!
ஹிஜாப்...
குறைந்துவிட்ட ஆடையால்
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை
மறந்துவிட்டப் பரிதாபம்!
அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று
முரசுக் கொட்டும் உலகம்!
போர்திக்கொண்டுப் போகும் எம்
சகோதிரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொருக்கி உனக்கு!
ஒழுங்கான ஆடையில்
உலா வரும் ஒரேச் சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும்
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும்
மானம் காப்போம் தரணியிலே!
வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம்
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!
கருணையாளனே! உன்னிடம் எம் கரம்.....
கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;
வெருங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!
முட்டியக் கண்ணிர்
பூமியை முத்தமிடுவதற்க்கு முன்னே
தட்டியப் பொடியாய்
தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!
ஒட்டு மொத்த நன்மையும்
தட்டிப் பறிக்க தேவையில்லை என
திறந்து விட்டாய் புனித மாதத்தை!
அடுத்தவரை பதம் பார்த்தே
பழகிப்போன என் நாவை;
அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!
வேகமாய் ஓடும் நாட்களை எண்ணி
சோகமாய் என் மனம் – விரைவில்
போய்விடுமோ பொக்கிஷமான
புனித மாதம்!
நெற்றியால் பூமியை
முத்தமிட்டு;
முணங்குகிறேன் உன் துதியை!
முட்டி நிற்கும்
முஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்
கட்டிப் போட அருள் செய்வாய்
கருணையாளனே!!
ஹிஜாப் தரும் சுதந்திரம்
என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?
எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்
மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?
சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே
கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு
கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்
அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்
இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்
அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்
மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு
வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்
கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை
உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.
- அல் குர் ஆன்59:10




No comments:
Post a Comment